SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அகூர் காளியம்மன் கோயிலை சீரமைக்க அறநிலைய துறை ஒதுக்கிய 50 ஆயிரம் நிதி சுருட்டல்

4/26/2019 6:45:56 AM

திருத்தணி, ஏப். 26: திருத்தணி அருகே கோயிலில் திருப்பணிக்காக இந்து அறநிலையத்துறை ஒதுக்கிய பணத்தை ஒப்பந்ததாரர் கோயில் பணிக்காக வழங்காமல் சுருட்டியதாக கலெக்டர், அறநிலையத்துறை அதிகாரியிடம் பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். தமிழக அரசின் இந்து அறநிலைய துறையின் சார்பில் கடந்த 2016-17ம் ஆண்டு திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலை சீரமைக்க 1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்காக டெண்டர் விடப்பட்டு எஸ்.கே.சண்முகம் என்பவரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது.ஆனால் அவர் பணியை முடித்து கொடுக்காமல் கிராம மக்கள் அணுகி, ‘‘நான் 50 ஆயிரம் பணம் தருகிறேன். நீங்களே கோயிலை சீரமைத்துக் கொள்ளுங்கள். பணிகளை செய்து கொண்டிருக்கும்போது மீதி பணத்தை வழங்குகிறேன்’’ என கூறியுள்ளார். இதன் பிறகு ஒப்பந்ததாரர் அகூர் கிராமத்துக்கு வரவே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே பணி செய்வதற்கு மீதி பணம் கேட்டு மக்கள் ஒப்பந்ததாரரை அணுகியபோது விரைவில் தருவதாக கூறி  அலைக்கழித்து வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ஒந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புகார் அனுப்பி உள்ளனர். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘அகூர் காளியம்மன் கோயிலை சீரமைக்க இந்து அறைநிலைய துறை ஒதுக்கிய 1 பணத்தில் 50 ஆயிரத்தை மட்டுமே ஒப்பந்ததாரர் வழங்கியுள்ளார். மீதி பணத்தை சுருட்டி உள்ளார். இதேபோல் 10க்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகளை எடுத்துவிட்டு முறையாக பணி செய்யவில்லை. செய்த வேலைக்கு பணத்தையும் தருவது இல்லை. இந்து அறநிலையத்துறை எங்கள் கோயிலுக்காக ஒதுக்கிய நிதி எங்கே போனது என? தெரியவில்லை’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்