SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை சம்பவம் பெண் உள்பட 2 பேருக்கு தனிப்படை போலீசார் வலை

4/26/2019 6:45:49 AM

சென்னை, ஏப். 26: சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், மானாம்பதி கண்டிகை அருந்ததியர் பாளையத்தை சேர்ந்தவர்  அரோக்கிய சாமி. இவரது மனைவி டயானா. (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) இவர்கள் நேற்று முன்தினம், எஸ்பி சந்தோஷ் ஹதிமானியிடம் ஒரு புகார் அளித்தனர். அதில், மானாம்பதி கண்டிகை பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவர், தனது 16 வயது மகளை வீட்டு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி, காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் அடைத்துவைத்து, அவரது நண்பர் இருதயராஜ் என்பவருடன் சேர்ந்து பாலியல் வன் கொடுமை செய்துள்ளார். மேலும் இதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிவித்தால் எனது மகளையும், குடும்பத்தையும் அழித்துவிடுவோம் என மிரட்டியயுள்ளனர் என கூறப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக விசாரிக்க பெருநகர் போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன்பேரில், போலீசார் விசாரிக்கின்றனர். தொடர்ந்து, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சிறுமியின் பெற்றோர், எஸ்பியிடம் புகார் அளித்ததை அறிந்ததும், வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் தலைமறைவாகி விட்டனர். இதற்கிடையில் போலீசாரின் விசாரணையில், வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் ஆகியார் சிறுமியை சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என தெரிந்தது. சென்னையில் ஒரு முதியவர் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. வேளாங்கண்ணிக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து அற்புதராஜுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்கள், போலீசாரிடம் சிக்கினால், இந்த வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள், யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது உள்பட பல்வேறு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, தனிப்படை அமைத்து உத்திரமேரூர், வேலூர், வந்தவாசி, புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜை, போலீசார் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்