SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

4/26/2019 6:45:43 AM

பள்ளிப்பட்டு, ஏப். 26: பள்ளிப்பட்டு பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வார்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பேரூராட்சி நிர்வாகம் கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் மோட்டார் மூலம் பைப் லைன்கள் அமைத்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை வெகுவாக குறைந்த நிலையில் ஆற்றில் நிலத்தடி நீர் குறைந்து குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகின்றது. இதனால், காலையில் ஒரு மணிநேரம் மட்டும் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் பேரூராட்சியில், 14 மற்றும் 15 ஆகிய வார்டுகளில் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், ஒரு சிலர் வீடுகளில் அனுமதியின்றி  மின் மோட்டார் அமைத்து குடிநீர் உறிஞ்சி விடுவதால், தெரு குழாய்களில் குடிநீர் வருவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் செய்துள்ளனர். இதில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று 50க்கும் மேற்பட்ட பெண்கள் பஜார் வீதியில் காந்தி சிலை அருகே காலி குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சாலை மறியிலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தனர். இதை ஏற்று கொண்ட பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்