SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருத்தணி அரசு கலை கல்லூரியில் விண்ணப்பம் வினியோகம் விறுவிறு

4/26/2019 6:45:35 AM

திருத்தணி, ஏப். 26: திருத்தணி அரசு கலை கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வினியோகம் தொடங்கியது. ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை வாங்கி சென்றனர். திருத்தணி அரசினர் கலைக்கல்லூரியில், நடப்பு கல்வி ஆண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இந்த விண்ணப்பங்கள் கடந்த 22ம் தேதி முதல் கல்லூரி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாளில் 450 பேர் விண்ணப்பங்கள் பெற்று சென்றுள்ளனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஜெயச்சந்திரன் கூறுகையில், ‘‘இளங்கலை பாட பிரிவுகளில் மாணவர்கள் மே மாதம் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கணினி மூலம் விண்ணப்பங்கள் பதிவு இறக்கம் செய்வதற்கான முயற்சிகள் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு ஆண்டுக்கு 350 மட்டும்  கட்டணமாக செலுத்தி பட்டப்படிப்பு படிக்கலாம்’’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்