SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொட்டபெட்டா சாலை சீரமைக்க எதிர்பார்ப்பு

4/26/2019 5:36:11 AM

ஊட்டி, ஏப். 26: தொட்டபெட்டா சிகரம் செல்லும் சாலை பழுதடைந்து காணப்படுவதால் வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள்  சிரமப்பட்டு வருகின்றனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நகருக்கு அருகாமையில் உள்ள தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்கின்றனர். தொட்டபெட்டா  சிகரம் ஊட்டி - கோத்தகிாி சாலையில் சுமார் 8 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா சந்திப்பில் இருந்து சிகரம் வரை சுமார் 3 கி.மீ., தூர சாலை உள்ளது. ஊட்டி வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் மூலம் தொட்டபெட்டா சென்று பார்வையிட்டு வருகின்றனர். வனத்துறை கட்டுபாட்டில் உள்ள இச்சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த சாலை மீண்டும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளங்களில் விழுந்து அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டுநர்கள் உட்பட பலரும் வனத்துறையினரை வலியுறுத்தி வருகின்றனர்.  தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது.  தொட்டபெட்டா சிகரத்திற்கு செல்ல கூடிய சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்கின்றனர். சிகரத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களிடமும் சூழல் சுற்றுலா மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் நல்ல வருவாய் கிடைத்து வரும் நிலையில், இச்சாலையை சீரமைக்க வனத்துறை எவ்வித அக்கறையும் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.  தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வாகனங்கள் சுலபமாக சென்று வர வசதியாக பள்ளங்களில் மண் மற்றும் கற்களை கொட்டி தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் எனவும், சீசனுக்கு பிறகு முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்