SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுபானம் அருந்தும் இடமாக மாறிய நஞ்சநாடு நிழற்குடை

4/26/2019 5:35:58 AM

ஊட்டி, ஏப். 26: ஊட்டி அருகே நஞ்சநாடு கிராமத்திற்கு செல்லும் சாலை சந்திப்பில் உள்ள பயணியர் நிழற்குடை பராமரிப்பின்றி மதுபானம் அருந்தும் இடமாக மாறியுள்ளது.  நீலகிரி மாவட்டத்தில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளின் நலன் கருதி முக்கிய சாலைகள், கிராமபுற சாலைகளில் உள்ள முக்கிய பஸ் நிறுத்தங்களில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும், எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பயணியர் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் பயணியர் நிழற்குடைகள் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சில பகுதிகளில் பயணியர் நிழற்குடைகள் முறையாக பராமரிப்பதில்லை. அவை குடிபோதை ஆசாமிகளின் கூடாரமாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

 இந்நிலையில் ஊட்டி - இத்தலார் சாலையில் நஞ்சநாடு கிராமத்திற்கு செல்லும் சாலை சந்திப்பில் உள்ள பயணியர் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாகவும் மாறியுள்ளது. போதை தலைக்கேறும் ஆசாமிகள் உள்ளேயே அசுத்தம் செய்வதோடு காலி மதுபாட்டில்கள், டம்ளர்களை வீசி சென்று விடுகின்றனர். இவற்றோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதேபோல் பல இடங்களில் உள்ள பயணியர் நிழற்குடைகளும் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. எனவே பராமரிப்பின்றி காணப்படும் பயணியர் நிழற்குடைகளை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்