SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை சீசனில் வாகன நெரிசல் தவிர்க்க ஊட்டி நகரில் உள்ள பார்க்கிங் தளங்களில் எஸ்.பி., ஆய்வு

4/26/2019 5:35:52 AM

ஊட்டி, ஏப். 26: நீலகிரி மாவட்ட எஸ்.பி., சண்முகப்பிரியா நேற்று ஊட்டி நகரில் போக்குவரத்து  மாற்றம், பார்க்கிங் வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார்நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கோடை சீசன் சமயமான மார்ச், ஏப்ரல் மாதங்களில் அதிகளவில் வருகை புாிகின்றனர். கோடை சீசனுக்கு ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாக பார்க்கிங் பிரச்னை உள்ளது. கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி கொள்ள வசதியாக பார்க்கிங் வசதிகள் உள்ள இடங்கள் கண்டறியும் பணிகளை காவல்துறையினர் துவக்கியுள்ளனர். முதற்கட்டமாக ஊட்டி நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய சாலைகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் டாக்சி டிரைவர்கள் அனுமதிக்கப்பட்ட 3,5 வாகனங்கள் மட்டும் நிறுத்தி பயணிகளை இறக்கி விட வேண்டும். ஓட்டுநர்கள் அங்கேயே இருத்தல் அவசியம்.

வெளி மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாகன நிறுத்தத்தில் மட்டுமே, வாகனங்களை நிறுத்த வேண்டும். டூரிஸ்ட் பஸ், மேக்சிகேப் வாகனங்கள் ஊட்டி நகரில் நோ பார்க்கிங், நோ என்டரி பகுதிகளில் இருந்தால் போக்குவரத்து விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்ட எஸ்.பி., சண்முகப்பிரியா நேற்று ஊட்டி நகரில் போக்குவரத்து மாற்றம், பார்க்கிங் வசதிகள் மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொண்டார். தாவரவியல் பூங்கா அருகேயுள்ள பார்க்கிங் தளம், பழங்குடியினர் பண்பாட்டு மைய வளாகத்தில் அமைந்துள்ள பார்க்கிங் பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், வாகன நிறுத்துமிடங்களில் உள்ள வசதிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கூடுதல் எஸ்பி., தம்பிதுரை, டவுன் டி.எஸ்.பி., தங்கவேல், போக்குவரத்து ஆய்வாளர் சதாசிவம் உட்பட பலர் உடனிருந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்