SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்மாபேட்டை அருகே கார் மோதி பைக்கில் வந்த இருவர் சாவு

4/26/2019 5:31:28 AM

பவானி, ஏப்.26: ஈரோடு மாவட்டம் பவானி அருகே கார் மோதியதில் பைக்கில் வந்த இருவர் பலியாகினர். இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஈரோடு அம்மாபேட்டை  அருகே உள்ள கொளந்தபாளையத்தை சேர்ந்தவர் விஜய் (33). இவரது மைத்துனர் முனிசாமி (30). இவர், பூனாச்சி நத்தமேட்டில் வசித்து வருகிறார். கட்டிடத்  தொழிலாளர்களான இருவரும் நேற்று முன்தினம் இரவு நத்தமேடு பகுதியில் இருந்து  பூனாச்சி நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனர். பெரியாண்டிச்சியம்மன்  கோயில் அருகே சென்றபோது எதிரே வந்த கார் பைக்கின் மீது மோதியது.

இதில்,  பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே  இறந்தனர்.  மோதிய வேகத்தில் காரும் ரோட்டில் கவிழ்ந்தது. கார் டிரைவர் லேசான  காயங்களுடன் தப்பினார். அம்மாபேட்டை போலீசார் சடலங்களை மீட்டு, அந்தியூர்  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்நிலையில், விபத்திற்கு காரணமான  கார் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர்  நேற்று முன்தினம் இரவு அம்மாபேட்டை - அந்தியூர் ரோட்டில் மறியல் செய்தனர்.போலீசார்  அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் சுமார்  ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

  • bangladeshtrain

    வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

  • wildfireaus

    காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

  • hongkongprofire

    ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

  • chicagosnow

    பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்