SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூர் புறவழி சாலையை 4 வழி சாலையாக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி மும்முரம்

4/26/2019 5:13:40 AM

அரியலூர், ஏப்.26: அரியலூரில் புறவழிச்சாலை 4 வழி சாலையாக அமைக்க தடுப்பு சுவர் கட்டும்பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.அரியலூர் மாவட்டத்தில் தற்போது 7 தனியார் சிமெண்ட் நிறுவனமும், 1 அரசு சிமெண்ட் நிறுவனமும் உள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இந்த லாரிகளால் அடிக்கடி  விபத்து ஏற்பட்டு சாலை விபத்து நடைபெற்று உயிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து அரசு அரியலூர்  புறவழிச்சாலை 2 வழியாக உள்ள சாலையை  4 வழி சாலையாக அமைக்கப்பட இருக்கிறது. அதற்கான சாலை பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சாலை ஓரத்தில் மண் அரிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு 12 கோடியில் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.      தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தார் சாலை இருந்து 25 அடி தள்ளி உள்ள தேசிய நெடுஞ்சாலையும்  நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் இந்த தடுப்பு சுவர் கட்டப்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்