SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அம்பளவார் கட்டளை - சுண்டகுடி சாலை படுமோசம் பொதுமக்கள் அவதி

4/26/2019 5:13:33 AM

அரியலூர், ஏப்.26: கற்கள் பெயர்ந்து படுமோசமாக உள்ள அம்பளவார் கட்டளை-சுண்டகுடி சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் சாலையில் உள்ள அம்பளவார் கட்டளை - சுண்டகுடி சாலை  மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இச்சாலையின் வழியாக சுண்டகுடி, காமரசவள்ளி, கோவிலூர் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு செல்லவேண்டிய முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலையின் வழியாக பள்ளி குழந்தைகளும், கல்லூரிக்கும் செல்லும்  மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும், வெளியூர் செல்பவர் உள்ளிட்ட தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சாலையில் நடந்துகூட செல்ல முடியாமல் சாலை உள்ளது. இச்சாலையில் குண்டும் குழியுமாக உள்ளதால் நடந்து செல்பவர்கள் கூட வளைந்து வளைந்து தான் செல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகி உள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும்,  கார்களில் வருபவர்களும் வாகனத்தை உருட்டிகொண்டுதான் செல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இச்சாலையில் செல்பவர்களுக்கு உடல்வழியும் சோர்வும் ஏற்படுகிறது. இச்சாலையை பயன்படுத்தும்போது மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.  இச்சாலையில் பெரிய வாகனங்கள்  லாரிகள் இப்பாதையை பயன்படுத்தவது இல்லை. அப்படியிருந்தும் இச்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தரமான சாலையாக அமைக்கவும், போடப்பட்ட சாலைகளை ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள்  கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்