SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 ஷிப்ட் எனக்கூறி 2 ஷிப்டுகளாக 16 மணி நேரம் வேலை மின்னணு வாக்குப்பெட்டிகளுக்கு பாதுகாப்பு பணி போலீசார் குமுறல்

4/26/2019 5:13:27 AM

பெரம்பலூர்,  ஏப்.26: பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்களுக்கான பாதுகாப்புப்பணியில்  3 ஷிப்ட் எனக்கூறி 2ஷிப்டுகளில் 16  மணிநேரம் பணிபுரிய செய்து பாடாய்படுத்துவதாக போலீசார் குமுறுகின்றனர்.
இந்திய  தேர்தல்ஆணையத்தால் 2ம் கட்டமாக நடத்தப்பட்ட பாராளுமன்ற தேர்தல் தமிழகம்,  புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்குக் கடந்த18ம்தேதி நடத்தப்பட்டது. இதில்  பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு  உட்பட்ட 1,644 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள் அனைத்தும் பெரம்பலூர் கொண்டுவரப்பட்டு, தனலெட்சுமி சீனிவாசன்  நர்சிங் கல்லூரியின் தரைதளத்தில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி,  முதல்தளத்தில் குளித்தலை சட்டமன்றதொகுதி, 2ம்தளத்தில் முசிறி  சட்டமன்றதொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.இதேபோல்  தனலெட்சுமி சீனிவாசன் பாலிடெக்னிக் கல்லூரியின் தரைதளத்தில்  மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி, முதல்தளத்தில் துறையூர் சட்டமன்றத்தொ  குதி, 2ம்தளத்தில் லால்குடி சட்டமன்றத்தொகுதி மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங் கள் பாதுகாப்பானஅறைகளில் வைத்துப்பூட்டி சீல்வைக்கப்பட்டது.  மேமாதம் 23ம்தேதி இங்கு வாக்குஎண்ணிக்கை நடத்தப்படுகிறது. இதற்காக  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறைகளுக்கும், வாக்குகள் எண்ணும் 2  கல்லூரிகளுக்கும், ஒட்டுமொத்த கல்லூரி வளாகத்திற்கும் என 3அடுக்கு போலீஸ்  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ்,  தமிழ்நாடு சிறப்புக் காவல்படை, கமாண்டோ படை, ஆயுதப்படை, மற்றும் உள்ளூர்  போலீஸ் பாதுகாப்புடன் 3ஷிப்ட் அடிப்படையில் பாதுகாப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட காவல்துறையினரிடம்  கேட்டால், 8 மணிநேரத்திற்கு ஒரு ஷிப்ட் என 3ஷிப்டுகளாக போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது எனக்கூறி வருகின்றனர். ஆனால் வெளியே 3ஷிப்ட்  எனக்கூறிவிட்டு உண்மையில் 2ஷிப்டுகளில் தங்களை ஈடுபடுத்தி வருவதாக உள்ளூர் போலீஸார்  குமுறி வருகின்றனர். இந்தக் குமுறல் வாட்ஸ்அப்பில் வெடித்து புதிய பர  பரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பெரம்பலூர் கவுண்டிங் சென்டரில் 2டீம்தான்  போட்டி ருக்காங்க, ஆனால் ஏ.பி.சி என்று 3ஷிப்ட் போட்டு கொல்றாங்க, யாராவது  எங்களை மன உளைச்சலில் இருந்து காப்பாத்துங்க என போலீஸாரின் குமுறல்  வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது. குறிப்பாக 8மணிநேரம்  பணிபுரிந்துவிட்டு வீடுசெல்வோர் 8மணிநேரத்திற்குள் வீட் டிற்குச்  சென்றுவிட்டு அதேநாளில் அடுத்த 8மணிநேரம் பணியைத் தொடரவேண்டும் என  உயர்காவல்துறை அதிகாரிகள் கூறிவருவதால் ஒருநாளில் 16 மணிநேரம் பணிக ளைச்  செய்துவிட்டு 8மணி நேரத்தில் எப்படி ஓய்வெடுப்பது, தூங்குவது எனக் கேள்வி  யெழுப்பி வருகின்றனர். போலீஸாரின் குமுறல்களை மாவட்ட காவல்துறை ஏன் கண்டுகொள்ளவில்லை என கேள்விஎழுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்