SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக்குகள் மோதல் கல்லூரி மாணவர் பலி

4/26/2019 5:13:20 AM

ஜெயங்கொண்டம், ஏப். 26: ஜெயங்கொண்டம் அருகே பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள காங்குழியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மணிகண்டன் (18). தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் தனது பைக்கில் ஆண்டிமடம் ரோட்டில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது கொடுக்கூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக்கும், மணிகண்டன் சென்ற பைக்கும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மணிகண்டன் மற்றும் எதிரே பைக்கில் வந்த சூரக்குழி கிராமத்தை சேர்ந்த மணியரசு (35) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் மணிகண்டன் சிகிச்சை பலனின்றி இறந்தார். மணியரசு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • BhuldanaAccidentMum

    மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் வேன் மீது லாரி கவிழ்ந்து பெரும் விபத்து: 13 பேர் பலியான சோகம்!

  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்