SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு விநியோகம் விவசாயிகளுக்கு அழைப்பு

4/26/2019 5:13:02 AM

ஜெயங்கொண்டம், ஏப். 26: ஆண்டிமடம் வேளாண் விரிவாக்க மையத்தில் 50 சதவீத மானியத்தில் தக்கைப்பூண்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதை வாங்கி பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.ஆண்டிமடம் வட்டாரத்தில் நெல் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள், பசுந்தாள் உரப்பயிராகிய தக்கைப்பூண்டு பயிரிடலாம். பின்னர் அதை மடக்கி உழவு செய்தபின் நெல் பயிர் நடவு மேற்கொள்வதால் மண்ணில் இடைவெளி அதிகமாக கிடைக்கும். பயிரின் வேர் வளர்ச்சி நன்றாக இருக்கும். நெல் பயிரில் தூர் எண்ணிக்கை அதிகரிக்கும். நெற்பயிரில் அதிக மகசூல் பெறலாம். ஆண்டிமடம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் தக்கைப்பூண்டு 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மானிய விலையில் தக்கைப்பூண்டு வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்