SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புயல் எச்சரிக்கை எதிரொலி அரசு அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் காரைக்கால் கலெக்டர் அறிவுறுத்தல்

4/26/2019 5:04:29 AM

காரைக்கால், ஏப்.26: புயல் எச்சரிக்கையை தொடர்ந்து காரைக்காலில் உள்ள அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். என, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா அறிவுறுத்தியுள்ளார்.வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள கடலோர மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் முதல் கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், அரசுத்துறை அதிகாரிகளுடன் கலந்து பேசிய கலெக்டர் பேசியது: வானிலை மையம் புயல் எச்சரிக்கையை அறிவித்திருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகிறது. கடந்த கஜா புயலின்போது, எந்தவித உயிர்சேதமும், பொருள்சேதமும் இன்றி  சிறப்பாக செயல்பட்ட காரைக்கால் மாவட்ட அரசு துறை அதிகாரிகள், இந்த முறையும் சிறப்பாக செயல்படவேன்டும். மின்துறை போதிய அளவு மின் கம்பங்களை வைத்திருக்கவேண்டும். சாய்வாக செல்லும் மின் கம்பங்களை உடனடியாக சரி செய்யவும், மின் கம்பங்களுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்தவும் வேண்டும்.

பொதுப்பணித்துறை மற்றும் நகராட்சி துறை அதிகாரிகளும் கவனமுடன் செயல்பட வேண்டும். பிரதான சாலையில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடங்களை எந்நேரமும் பயன்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, ஜெனரேட்டர் வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, ஜெனரேட்டர் உள்ளிட்ட வசதிகளுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேலும் மரம் வெட்டும் கருவிகள், மின் தட்டுப்பாட்டை சரி செய்யும் ஜெனரேட்டர் போன்றவற்றை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகள் மட்டும் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களை உஷார் படுத்தவேண்டும். மீனவர்கள் கடலுக்கு செல்லாதவாறு மீன்வளத் துறை சம்பந்தப்பட்ட மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். என்றார். கூட்டத்தில் மாவட்ட துணை ஆட்சியர்கள் ஆதர்ஸ், பாஸ்கரன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-09-2019

    19-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china_shankaiii1

    பியானோ வாசிக்கும் ரோபோ, வெல்டிங் ரோபோ, பயோனிக் ரோபோ... வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் அடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி

  • paris_taksi11

    போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பிரான்சில் ஃபிளையிங் டேக்ஸி எனும் பெயரில் நதியில் மிதவை வாகனம் வடிவமைப்பு

  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்