SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்காலில் கோடைவிடுமுறையையொட்டி மாணவர்களுக்கான நுண்கலை பயிற்சி துவக்கம்

4/26/2019 5:04:13 AM

காரைக்கால், ஏப்.26: கோடைவிடுமுறையையொட்டி, புதுச்சேரி அரசின் கல்வித்துறை சார்பில், காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கான கோடைக்கால நுண்கலை பயிற்சி துவங்கியது.புதுச்சேரி அரசின் கல்வித் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கோடை காலத்தையொட்டி, நுண்கலை பயிற்சி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்டது. இடையில் இந்த பயிற்சி நிறுத்தப்பட்ட நிலையில், புதுச்சேரி வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் முயற்சியில் நடப்பாண்டு மீண்டும் இப்பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளது. காரைக்கால் மற்றும் திருநள்ளாறு பகுதியில் மாவட்ட கல்வித்துறையின் ஜவஹர் சிறுவர் இல்லம் சார்பில், காரைக்கால் கல்வித்துறை அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர் இல்லம்,  மற்றும் திருநள்ளாறு அரசு நடுநிலைப் பள்ளியில் இந்த நுண்கலை பயிற்சி தொடங்கப்பட்டது.

இப்பயிற்சியில் 6 முதல் 16 வயது வரையிலான மாணவர்கள் கலந்துகொள்ள முன்னதாக அழைப்பு விடுக்கப்பட்டது. முதல் நாளில் பதிவு செய்துகொண்டபடி காரைக்காலில் 60 மாணவ, மாணவியரும், திருநள்ளாறு மையத்தில் 28 மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர். இரு மையங்களிலும் இந்த பயிற்சியை காரைக்கால் முதன்மைக்கல்வி அதிகாரி  அல்லி தொடங்கி வைத்து பேசியது:மாணவர்கள் கோடை விடுமுறையை எந்த பயனுமின்றி போக்கிவிடக்கூடாது என்பதாலேயே கல்வித் துறை இம்மாதிரியான கலையை மாணவர்களுக்கு கற்றுத்தர ஏற்பாடு செய்திருக்கிறது. விரும்பும் மாணவர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம். இளம் வயதினரிடம் இதுபோன்ற கலை குறித்து ஆர்வத்தை ஏற்படுத்தும் தளமாக இது திகழ்கிறது. காலப் போக்கில் மாணவர்கள் அந்த கலையில் திறன் மிக்கவர்களாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இந்த பயிற்சியில் தவறாமல் கலந்துகொண்டு மாணவ மாணவியர் திறனை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார்.

பயிற்சியில் பரதம், நடனம், ஓவியம், கீ போர்டு, கராத்தே, யோகா, வீணை, வாய்ப்பாட்டு, தையல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளும் இங்கு கற்றுத்தரப்படுகின்றன. இந்த பயிற்சி முகாம்  வரும் மே 31ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜவஹர் சிறுவர் இல்லத்தில் பணியாற்றிய பல்வேறு கலை பயிற்சியாளர்களும், வெளியிலிருந்தும் அந்தந்த கலையில் திறன் மிக்கவர்கள் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. காலை 9.30 முதல் மதியம் 12.30  மணி வரை இந்த பயிற்சி நடைபெறுகிறது. கோடை விடுமுறையில் உள்ள மாணவர்கள் ஆர்வமாக இந்த பயிற்சியில் கலந்துகொள்ளலாம். முகாமில், கல்வித்துறை வட்ட  துணை ஆய்வாளர்கள் கார்த்திகேசன், கண்மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்