SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உதவிபெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்

4/26/2019 5:04:04 AM

காரைக்கால், ஏப்.26: ஆசிரியர் நியமனத்தில் படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களை கொண்டே நிரப்ப வேண்டும். என, காரைக்கால் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து, காரைக்கால் அரசு உதவிப்பெறும் பள்ளிகளின் பெற்றோர் சங்கத் தலைவர் வின்சென்ட், செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பது: காரைக்காலில் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் வெகுவாக குறைந்து வருகிறது. அண்மையில் வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் முன்னணியாக திகழ்ந்த அரசுப் பள்ளிகள் பல பின்னுக்குப் போய்விட்டன. 100 சதவீதம் தேர்ச்சி என்ற தனியார் பள்ளிகளை போன்று அரசு  பள்ளிகளால் வரமுடியவில்லை. தேர்ச்சி வீதங்களும் குறைவாகவே இருக்கிறது.

மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதும் ,மாணவர்கள் விரும்பக்கூடிய பாடப் பிரிவுகள் இல்லாததும், தேர்ச்சி குறைபாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசுப் பள்ளியில் பாடப் பிரிவுகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை ஓய்வுபெற்றவர்களைக் கொண்டு நிரப்ப அரசு முடிவு செய்திருக்கிறது. தற்போதைய, மேம்படுத்தப்பட்ட பாடத் திட்டங்களுக்கேற்ப அவர்களால் கல்வி போதிப்பு செய்ய முடியாது. படித்து வேலையில்லா இளைஞர்கள் பலர் வேலைக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டால், மாணவர்களின் கல்வித்தரம் உயரும். பள்ளிகள் மட்டுமல்லாது எந்தவொரு துறையிலும் அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்களை மீண்டும் பணியமர்த்தும் செயலை புதுச்சேரி அரசு  செய்து வருகிறது. இதுபடித்து வேலையில்லா இளைஞர்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. ஆசிரியர் நியமனம் என்பது படித்து வேலையில்லாமல் இருப்போரை கொண்டே நிரப்ப வேண்டும். நியமனம் வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும். எந்தவொரு துறையிலும் பணிஓய்வு பெற்றவர்களை நியமிப்பதில்லை என்ற முடிவை அரசு எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்