SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஸ்தான்சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் மின் அலங்கார சந்தன கூடு ஊர்வலம்

4/26/2019 5:03:57 AM

காரைக்கால், ஏப்.26: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்க்காவின் வருடாந்திர கந்தூரி விழாவையொட்டி, மின் அலங்கார சந்தனக்கூடு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது.  சவுதி அரேபியா நாட்டிலிருந்து 18ம் நூற்றாண்டில் இறைப்பணி மேற்கொள்ள இந்தியா வந்த மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் என்ற இறைதூதர், திருச்சி, நாகூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றி வந்தார். தமது 120வது வயதில் காரைக்காலில் தங்கியிருக்கும் போது இயற்கை எய்தினார். அவரது நினைவாக காரைக்காலில் கட்டப்பட்டதுதான் மஸ்தான் சாஹிப் வலியுல்ஹா தர்க்கா. இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு 196வது கந்தூரி விழா, கடந்த 15ம் தேதி இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 முன்னதாக, கொடிமரத்தில் ஏற்றப்படும் கொடியானது, அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ரதத்தில், பள்ளிவாசலிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இரவு கொடிமரத்தை வந்தடைந்தது. தொடர்ந்து கொடியேற்ற
நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 24ம் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதிவுலா வரும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில், ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் மும்மதத்தினரும் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நாளை மறுநாள் இரவு கொடி இறக்கம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.ஆசிரியர் நியமனத்தில் வேலையில்லா இளைஞர்களை நிரப்ப வேண்டும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்