SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருமக்கோட்டை- பெருமாள் கோவில்நத்தம் இடையே பல்லாங்குழி சாலையால் மக்கள் அவதி

4/26/2019 3:14:41 AM

மன்னார்குடி, ஏப். 26: கோட்டூர் அருகே உள்ள  தெற்கு தென்பரையில்  இருந்து  ஆவிக்கோட்டை செல்லும் இணைப்பு  சாலையில்  திருமக்கோட்டை கோவில்நத்தம் இடையிலான பல்லாங்குழி சாலையை உடன் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர்  ஒன்றியம் தெற்கு தென்பரை கிராமத்தில் இருந்து திருமக்கோட்டை, பெருமாள் கோவில் நத்தம் வழியாக ஆவிக்கோட் டை செல்வதற்கு சுமார் 8 கிமீ தூரத்திற்கு இணைப்பு சாலை வசதி உள்ளது, பின்னர் அங்கிருந்து மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டை செல்வதற்கும் நெடுஞ்சாலை வசதி உள்ளது. இந்த இணைப்பு சாலையை திருமக்கோட்டை, மகாராஜபுரம், பெருமாள் கோவில் நத்தம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், மாணவ, மாணவிகள், வர்த்தகர்கள் ஆவிக்கோட்டை வழியாக மன்னார்குடி மற்றும் பட்டுக்கோட்டைக்கு செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த இணைப்புச்சாலை 5 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அவசர கதியில் போடப்பட்ட இந்த தரமில்லாத இணைப்பு சாலையில் திருமக்கோட்டை பெருமாள் கோவில் நத்தம் இடையிலான சுமார் 5 கிமீ தூரத் திற்கான சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதிய பராமரிப்பின்றி சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறிக் கிடக்கிறது. பல்லாங்குழி சாலையால் கடந்த 3 ஆண்டுகளாக இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.பல்லாங்குழி சாலை சீரமைக்கப்படாததால்  இவ்வழியே வந்த ஒரு அரசு பேருந்தும் வேறு  வழியாக திருப்பி விடப்பட்டதால் நீண்ட தூரம் சென்று பஸ் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையை பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர். அறுவடை சீசன்களின் போது தங்களின் விளை பொருட்களை மெயின் ரோட்டிற்கு கொண்டு வர முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பெருமாள்கோவில் நத்தம்  கிராமத்தை சேர்ந்த இளைஞர் பாலசுந்தரம்  கூறுகையில், பெருமாள் கோவில் நத்தம் கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இக்கிராமத்தின் வழியாக கடந்த 5  ஆண்டுகளுக்கு முன்பு அவசர அவசரமாக போடப்பட்ட தார்சாலைகள் அனைத்தும் சிதிலமடைந்து, கற்கள் பெயர்ந்து பெரும்பாலான இடங்களில்  பள்ளங்கள் உருவாகி தற்போது பல்லாங்குழி சாலையாக மாறி அதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி அந்த சாலையில் கட்டப்பட்ட ஒரு சிறு பாலமும் சிதிலமடைந்து இடிந்த நிலையில் உள்ளது. இந்த  சாலையின் வழியாகத் தான் ஆவிக்கோட்டை மற்றும் பரவாக்கோட்டை செல்லும் பொது மக்களும் பல பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிபுரிவோர் என அனைத்து தரப்பினரும் சென்று வரக்கூடிய சூழ்நிலையில்  இச்சாலை பாதிப்பால் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும்  மன்னார்குடியிலிருந்து பரவாக்கோட்டை, ஆவிக்கோட்டை,பெருமாள் கோவில் நத்தம், திருமக் கோட்டை வழியாக தெற்கு தென்பரை கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்றும் இயக்கப்படுகிறது.

இந்த சாலை பழுதானதால் தற்போதைய சூழலில் அந்த பேருந்தும் இவ்வழியே  சரியாக இயக்கப்படுவதில்லை. எனவே மாவட்ட நிர்வாகம்,  கோட்டூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பெருமாள் கோவில் நத்தம் கிராமத்தில் உள்ள பல்லாங்குழி சாலையை புதிதாக சீரமைத்து போட்டு தர வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்