SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாகன ஓட்டிகள் அவதி

4/26/2019 3:13:03 AM

திருத்துறைப்பூண்டி, ஏப். 26: திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் மீண்டும் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நகரபகுதியில் தினந்தோறும், கிராம பகுதிகளில் 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்கப்படுகிறது. மேலும் பல இடங்களில் குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வீணாக ஓடுவது குறித்தும் அடிக்கடி தினகரனில் செய்தி வெளியிட்ட பிறகு சரிசெய்யப்படும். இந்தநிலையில் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகில் நெடுஞ்சாலையில் திருத்துறைப்பூண்டியிலிருந்து தலைஞாயிறு செல்லும் கொள்ளிட கூட்டுகுடிநீர் மெயின் லைன் பைப் உடைந்து பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் ஏற்படுவது குறித்து தினகரனில் படத்துடன் செய்தி வெளியிட்ட பிறகு தற்காலிகமாக பள்ளம் சரி செய்யப்பட்டது. கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால் தற்போது மீண்டும் நெடுஞ்சாலையிலுள்ள மெயின் பைப் லைன் உடைந்து பள்ளம் ஏற்பட்டு பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் காமராஜர் சிலை அருகில் ஏற்பட்டுள்ள உடைப்பினை நிரந்தரமாகசரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

  • 26-06-2019

    26-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • newyork

    நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்