SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீடாமங்கலம் பெரியார் சிலையில் இருந்து சிவன் கோயில் வரை கற்கள் பதிக்க தோண்டிய பள்ளத்தால் மக்கள் அவதி

4/26/2019 3:12:01 AM

நீடாமங்கலம், ஏப். 26: நீடாமங்கலம் பெரியார் சிலையில் இருந்து சிவன் கோயில் வரை கற்கள் பதிக்க தோண்டிய பள்ளத்தால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலையிலிருந்து சிவன் கோயில் வரை மோசமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என கடந்த சில மாதத்திற்கு முன் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து தார் சாலை போடப்பட்டது. பின்னர் மழை பெய்தால் சாலையின் இருபுறமும் சேறும் சகதியுமாக போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது என தினகரனில் மீண்டும் படத்துடன் செய்தி வெளியானது.

இதையடுத்து பெரியார் சிலையிலிருந்து (பேரூராட்சி அலுவலகம் எதிரே) சாலையின் இருபுறமும் ஒரு அடி ஆழம் வரை குழி தோண்டி சிறிது தூரம் வரை கற்கள் புதைக்கப்பட்டது. சாலையின் எதிரில் கற்கள் புதைக்க கடந்த 2 மாதத்திற்கு முன் குழி தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை கற்கள் பதிக்கப்படாததால் கடைகளில் பொருட்கள் வாங்க வரும் முதியவர்கள் குழியில் விழுந்து செல்லும் அவல நிலை உள்ளது. வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. எனவே விரைவில் சாலையோரம் கற்கள் பதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்