SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

4/26/2019 2:39:49 AM

கிருஷ்ணகிரி, ஏப்.26: கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வரும் மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு, 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்றார். அங்கு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அனுமதி பெற்ற அரசியல் கட்சி முகவர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனியாக 6 அறைகளிலும், ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு அறையிலும் என மொத்தம் 7 அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறும் கண்காணித்து வருகின்றனர்,’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2019

    21-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்