SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொளுத்தும் கோடை வெயிலால் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

4/26/2019 2:38:32 AM

கிருஷ்ணகிரி, ஏப்.26:  கோடை வெயில் சுட்டெரிப்பதால், கிருஷ்ணகிரி அணையில் மீன்கள்  செத்து மிதக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
கர்நாடகா மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும்  தென்பெண்ணை ஆறு, தமிழகத்தில் கிருஷ் ணகிரி மாவட்டத்தின் வழியாக தர்மபுரி,  திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. இந்த  ஆற்றின் குறுக்கே, கிருஷ்ணகிரி அருகே கே.ஆர்.பி.அணை கட்டப்பட்டுள்ளது. 52  அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 24 அடி உயரம் மட்டுமே தண்ணீர்  உள்ளது. போதிய மழை இல்லாததால், கிருஷ்ணகிரி அணைக்கு கடந்த 20  நாட்களுக்கு மேலாக, நீர்வரத்து முற்றிலுமாக இல்லை. இந்நிலையில்  அணையில் இருந்து விநாடிக்கு 42 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவதால்,  அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

போதிய தண்ணீரில்லாத நிலையில், கோடை வெயில் 105 டிகிரியாக கொளுத்தி வருவதால், அணையில்  விடப்பட்ட லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள், செத்து மிதக்கின்றன.  இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக, அணையை  சுற்றிப்பார் க்க வரும் சுற் றுலாப் பயணிகள் அவதிக்கு ஆளாகின்றனர். எனவே, அணையில் செத்து  மிதக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த, பொதுப்பணித்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வே ண்டும்  என சுற்று லாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்