SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனியார் ஊழியர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறல் நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணிகள் முடக்கம்

4/26/2019 2:29:44 AM

நாமக்கல், ஏப்.26:  நாமக்கல் நகராட்சியில் துப்புரவு பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள தனியார் ஊழியர்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதால், பணிகள் முடங்கி, சுகாதார சீர்கேடு அபாயத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள் உள்ளன. இதில் 30 வார்டுகளில் துப்புரவு பணி தனியாருக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. கட்டிட காண்டிராக்டர், பூங்கா காண்டிராக்டர்கள் இந்த பணியை டெண்டர் எடுத்துள்ளனர். இவர்கள், 30 வார்டுகளிலும் 299 துப்புரவு பணியாளர்களை நியமித்து, துப்புரவு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். வீடு, வீடாக சென்று குப்பை சேரிகத்தல், சாக்கடை சுத்தம் செய்தல், சாலைகளை கூட்டுதல் போன்ற பணிகளை செய்யவேண்டும். ஆனால், தனியார் டெண்டர் எடுத்த பகுதிகளில், சமீப காலமாக துப்புரவு பணிகள் சரியாக நடைபெறவில்லை. பணிக்கு சரியாக ஆட்கள் வருவதில்லை என பொதுமக்கள் தரப்பில் இருந்து நகராட்சிக்கு புகார்கள்  வந்தவண்ணம் உள்ளது.

குறிப்பாக நாமக்கல் கடைவீதி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, ராமாவரம்புதூர், மெயின்ரோடு ஆகிய இடங்களில், தனியார் துப்புரவு பணியாளர்கள் தினமும் பணிக்கு வராமல், 3 நாளைக்கு ஒரு முறை மட்டுமே வருவதால் குப்பை கழிவுகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணிகளும் சரியாக நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சரவணன் கூறுகையில், ‘30 வார்டுகளின் துப்புரவு பணியை, தனியாருக்கு கொடுத்துள்ளனர். ஆனால், நகராட்சி துப்புரவு ஆய்வாளர், பணி மேற்பார்வையாளர்களால் தனியார் துப்புரவு பணியாளர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்கள் நினைத்த போது தான் பணிக்கு வருகிறார்கள். இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் துப்புரவு பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது,’ என்றார்.

நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர்கள் கூறுகையில், ‘தனியார் துப்புரவு பணியாளர்களின் வருகைப்பதிவேட்டை காண்ட்ராக்டர் தான் பராமரிப்பு செய்கிறார்கள். தினமும் ஒருவருக்கு ₹260 வரை சம்பளம் அளிக்கப்படுகிறது. ஆனால், அதற்கேற்ப வேலை செய்வதில்லை. டெண்டர் எடுத்த நபர்கள் நியமித்துள்ள மேற்பார்வையாளர்களும், ஏரியா பக்கம் வந்து பணிகள் நடைபெறுவதை கண்காணிப்பதில்லை. இதுகுறித்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை,’ என்றனர்.

நகராட்சியில் 128 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களை விட தனியார் துப்புரவு பணியாளர்கள் அதிகம் உள்ளனர். எனவே, நகரின் ஒட்டுமொத்த சுகாதார பணியும் தனியார் பணியாளர்களை நம்பியே உள்ளது. ஆனால், இவர்களை கட்டுப்படுத்த முடியாமல் நகராட்சி அலுவலர்கள் திணறுகிறார்கள். நிரந்தர துப்புரவு பணியாளர்கள் நகரில் உள்ள 9 வார்டுகளில் மட்டும் துப்புரவு பணிகளை செய்து வருகிறார்கள்.
 நாமக்கல் நகராட்சியில் தனியார் துப்புரவு ஊழியர்களை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருவதால், சுகாதார பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு அபாயம் உருவாகியுள்ளதால், மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2019

    18-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RoboChefOdisha

    உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்

  • AIADMK48

    அதிமுகவின் 48வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

  • KateWilliamNorthPak

    அரசு முறை பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து இளவரசர்: பழங்குடியினர் நடன நிகழ்ச்சியை கண்டு உற்சாகம்

  • SouthPhilippinesEQ

    பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் உயிரிழப்பு..கட்டிடங்கள் சேதம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்