SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால்நடை மருத்துவ கல்லூரியில் சுயதொழில் தொடங்க பயிற்சி

4/26/2019 2:29:29 AM

நாமக்கல், ஏப்.26: நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கறவை மாட்டு பண்ணையம், செம்மறியாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி, உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல், கால்நடை பண்ணை கழிவினை பயன்படுத்துதல், முயல் வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, ஜப்பானியக் காடை வளர்ப்பு மற்றும் நாட்டுக் கோழி வளர்ப்பு குறித்து சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.  இப்பயிற்சிக்கான கல்வி தகுதியாக, தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல் பயிற்சிக்கு மட்டும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு மாத கால பயிற்சிக்கு ₹500 முதல் ₹2 ஆயிரம் வரை பயிற்சிக்கு தகுந்தவாறு கட்டணம் செலுத்தலாம். இப்பயிற்சியில் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களும், கால்நடை வளர்ப்போர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்