SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செங்கோடு அருகே குடிநீர் விநியோகம் கோரி பிடிஓ அலுவலகம் முற்றுகை

4/26/2019 2:29:15 AM

திருச்செங்கோடு, ஏப்.26: திருச்செங்கோடு அருகே அம்மையப்பா நகரில் குடிநீர் விநியோகத்தை சீர்செய்யக்கோரி பிடிஓ அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுக்கா வரகூராம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பா நகர் பொதுமக்கள், திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர், திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்த அலுவலர்கள் சமசரசப்படுத்தியதின் பேரில், பிடிஓ பரமசிவத்திடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், அவர்கள் கூறியிருப்பதாவது:

திருச்செங்கோடு ஒன்றியம் வரகூராம்பட்டி கிராமம், அம்மையப்பா நகரில் 2005ம் ஆண்டு முதல் சுமார் 60 குடும்பங்கள்  குடியிருந்து வருகிறோம். இந்த குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை. முக்கியமாக குடிநீர் வசதி இல்லை.  போர்வெல் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி வசதி இருந்தும், முறையாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதில்லை. குடிநீர் ஆபரேட்டர் முறையாக தண்ணீர் எடுத்து விடுவதில்லை. இதனை பலமுறை சுட்டிக்காட்டியும் கண்டுகொள்ளாமல் பொதுமக்களுக்கு கஷ்டத்தையும், வேதனையையும் தந்து கொண்டு இருக்கிறார்.

மேலும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, கடந்த 5 ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதுகுறித்து 02.10.2018ம் தேதி கிராம சபை கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.  எனவே, போர்கால அடிப்படையில் சம்பந்தபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தும், முறையாக தண்ணீர் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்