SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்

4/26/2019 2:29:03 AM

நாமக்கல், ஏப்.26: தமிழகம் மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு துணை தலைவர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொதுமக்கள் உரிய காலத்திற்குள் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை நீதிமன்றங்கள் மூலம் விரைவாக பெற்று வந்தனர். அதை மாற்றி உதவி கலெக்டரிடம் மனு செய்து பெற்றுக்கொள்ள நடைமுறைகள் மேற்கொள்ளப்படுவதால், மிகவும் தாமதமாகிறது. இதனால், பொதுமக்கள் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை உயர்நீதிமன்றம் மூலம் மீண்டும் பழைய நிலைக்கே மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். மோட்டார் வாகன விபத்து வழக்குகள் முறையாக நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தேனி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணையின்போது வக்கீல்களை அவதூறாக பேசிய நபர்களை கைது செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும்(26ம் தேதி), நாளையும்(27ம் தேதி) வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வக்கீல்கள் கலந்து கொள்கிறார்கள். நாமக்கல் மாவட்டத்திலும் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வக்கீல்கள் ஈடுபடுகிறார்கள்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்