SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சுழி, நரிக்குடி பகுதியில் கண்மாய்களை தூர்வார வேண்டும்

4/25/2019 2:55:55 AM

திருச்சுழி, ஏப். 25: திருச்சுழி, நரிக்குடி பகுதியில் உள்ள கண்மாய்களை தூர்வார, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சுழி, நரிக்குடி பகுதியில் பெரும்பாலான கண்மாய்கள் தூர்வாரப்படாததால் மழைநீரை சேமிக்க வழியில்லை. இதனால் விவசாய பாசனத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் கண்மாய்களில் உள்ள கருவேல மரங்கள், ஆகாய தாமரைகளை அகற்றி தூர்வாரி, வரத்துக் கால்வாய்களை சீரமைத்து மழைநீரை சேமிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கிராமப்பகுதிகளை அதிகம் கொண்டது திருச்சுழி தாலுகா. நெல் உள்ளிட்ட பல பயிர்கள் முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பி பயிரிடப்படுகிறது. பொதுப்பணித்துறை மற்றும் ஒன்றியத்திற்குச் சொந்தமான ஏரளமான கண்மாய்கள் உள்ளன. இவைகளில் பெரும்பாலானவை தூர்வாரப்படாமல் முட்புதர், கருவேல மரம், ஆகாய தாமரை நிறைந்து காணப்படுகிறது. நரிக்குடி ஒன்றியத்தில் சுமார் 170க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு அனைத்து கண்மாய்களின் நிலையும் இது போலத்தான் உள்ளது. மழையின்போது வரும் சிறிதளவு நீரையும் அவை உறிஞ்சி விடுகிறது.

அதே சமயத்தில் கண்மாய்களுக்கு முறையான வரத்துக் கால்வாய்கள் இல்லை. அவைகள் அனைத்தும் சேதமடைந்து தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைநீர் கண்மாயை முழுமையாக சென்று சேர வழியில்லை. வறட்சி காரணமாக ஆண்டுதோறும் பயிர் சாகுபடி பரப்பு குறைந்து விளைநிலங்கள் தரிசாக மாறி வருவது கவலையளிக்கிறது. எனவே கோடை கால மழை துவங்கும் முன் மழைநீரை சேமிக்க மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களிலும் கருவேல மரங்கள், முட்புதர்கள், ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும். சேதமடைந்த வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். மறையூர் கருப்பையா கூறுகையில், ‘இப்பகுதியில் உள்ள பெரும்பலான கண்மாய்கள் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டது. இதனால் கண்மாய்களில் நீரை சேமிக்க முடியாமல் விவசாய பாசனத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. கண்மாயிலுள்ள முட்புதர்களை அகற்றி ஆழப்படுத்தி அதனை முழுமையாக தூர்வாரி நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ilavarsar_pakisthn111

    பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனைவியுடன் முதன்முறையாக பாகிஸ்தான் பயணம்

  • kavan_manavai11

    அமெரிக்காவில் மனைவியை சுமந்து ஓடும் போட்டி : சேறும் சகதியுமான குட்டை, மணல் மேடு உள்ளிட்ட பல தடைகளை கடந்து கணவன்மார்கள் ஓட்டம்

  • seuol_expooo1

    தென்கொரியாவில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : சாகசத்தில் ஈடுபட்ட ராணுவ விமானங்கள்

  • pumbkin_comp111

    அமெரிக்காவில் ராட்சத பூசணிக்காய்களுக்கான போட்டி : 987 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதலிடத்தை பிடித்தது

  • bday_day11

    ஏவுகணை நாயகனின் 88வது பிறந்த தினம் இன்று!.. : கனவுகளை விதைத்த அப்துல் கலாமின் அறிய புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்