SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகாசி நகராட்சி 32வது வார்டில் வீடுகளுக்குள் புகும் வாறுகால் கழிவுநீர்

4/25/2019 2:55:28 AM

சிவகாசி, ஏப். 25: சிவகாசி நகராட்சி 32வது வார்டு காளியம்மன் கோயில் தெருவில் வாறுகால் கழிவுநீர் மழை காலங்களில் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. கழிவுநீர் அப்பகுதியில் குளம்போல் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. சிவகாசி நகராட்சி 32வது வார்டில் பிச்சாண்டி, மாரிமுத்து, புதுத்தெரு, காளியம்மன் கோயில் தெரு உள்ளன. இந்த வார்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவும் சரி வர செய்து தரப்படவில்லை. காளியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் செல்ல பிரதான வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. பட்டிதெரு, ஆனந்தப்ப நாடார் தெரு, பிகேஎஸ் தெரு வாறுகால் கழிவுநீர் இந்த வாறுகால் வழியாக சென்று கிருதுமால் ஓடையில் கலக்கிறது. பட்டி தெருவில் உள்ள பொது கழிப்பறை கழிவுநீரும் இந்த வாறுகால் வழியாகத்தான் செல்கிறது. வாறுகாலில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் நிரம்பி செல்ல வழியின்றி வாறுகாலிலேயே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் அடிப்பதோடு புழுக்கள் உற்பத்தியாகி வீடுகளுக்குள் வந்து செல்கிறது.

மழை காலங்களில் லேசான மழைக்கே கழிவுநீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. காளியம்மன் கோவில் தெருவில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் அதிகம் வசிப்பதால் இங்குள்ள பெரும்பாலான வீடுகள் குடிசை மற்றும் ஓடு வேயப்பட்ட வீடுகளாக உள்ளன. இந்த வீடுகள் தரைதளத்தில் இருந்து தாழ்வாக உள்ளதால் மழைநீர் வீடுகளில் தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்துகிறது. கழிவுநீர் சுகாதார கேட்டால் இப்பகுதி குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா நோய் அதிகம் பரவுகிறது. காளியம்மன் கோவில் தெரு கழிவுநீர் நேராக கிருதுமால் ஓடையில் கலக்காத வகையில் தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர். இதனால் வாறுகால் கழிவுநீா் செல்ல வழியின்றி தேங்கி சுகாதார கேட்டை ஏற்படுத்தி வருகிறது. மணிநகர், காளியம்மன் கோவில் தெருவுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் உள்ள வாட்டர் டேங்கில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதிக தூரத்தில் இருந்து குடிநீர் விநியோகிப்பதால் குழாயில் தண்ணீர் வருவதில்லை. இதனால் அடிபம்பு மூலம் அடித்தும், கிணறு போல் குழிதோண்டியும் பெண்கள் குடிநீர் எடுக்க வேண்டியுள்ளதால் சிரமப்படுகின்றனர்.

மாரிமுத்து தெருவில் பஸ்நிலையம் அருகே உள்ள வாறுகாலை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் திறந்துள்ளனர். இதனால் வாறுகால் கழிவுநீர் செல்ல வழியின்றி மழை காலங்களில் சாலையில் பெருக்கெடுத்து ஓடி சுகாதார கேட்டை ஏற்டுத்தி வருகிறது. நேற்று முன்தினம் சிவகாசி பகுதியில் கனமழை பெய்தது. இந்த மழைக்கு 32வது வார்டில் உள்ள பல தெருக்களில் மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டது. தற்போது சிவகாசி நகராட்சி பகுதியில் குப்பை அகற்றும் பணிகள் சரிவர நடைபெறுதில்லை. இதனால் தெருக்களில் மலைபோல் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடக்கிறது. மழை பெய்யும்போது குப்பை கழிவுகள் மழை நீருடன் கலந்து தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. மணிநகர் ஆனந்த் கூறுகையில், ‘நகராட்சி 32வது வார்டு மணிநகரில் குடிநீர் சரிவர வருவதில்லை.

அடிகுழாயில் அடித்து எடுக்க வேண்டியுள்ளதால் பெண்கள் அவதிப்படுகின்றனர். இப்பகுதியல் குப்பை கழிவுகள் முறையாக அகற்றப்படாததால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வாறுகால் இடிந்து கிடப்பதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். வாறுகால் முறையாக அகற்றுவதில்லை. காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில், ‘இங்குள்ள கிருதுமால் ஓடையில் ஓட்டல் கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால் கழிவுநீர் மழை காலங்களில் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. காளியம்மன் கோவில் வாறுகால் கழிவுநீர் நேராக கிருதுமால் ஓடைக்கு செல்ல வழியின்றி தடுப்புச்சுவர் கட்டியுள்ளனர். இதனால் வாறுகால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. சிறு மழை பெய்தால் கூட வீட்டிற்குள் புகுந்து விடும். கிருதுமால் ஓடையை தூர்வாரி கழிவுநீர் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

  • paradechina

    சீனாவில் ஆசிய கலாச்சார திருவிழா 2019: பல நாடுகளின் நாகரிகங்களை பறைசாற்றும் வகையில் அணிவகுப்பு

  • buddhapurnima

    புத்தர் அவதரித்த தினமான புத்த பூர்ணிமா பண்டிகை உலகமெங்கும் விமர்சையாக கொண்டாடப்பட்டது: புகைபடங்கள்

  • flyingtaxi

    ஜெர்மனியில் 5 இருக்கைகள் கொண்ட பறக்கும் டாக்ஸி அறிமுகம்: சோதனை ஓட்டம் வெற்றி

  • 20-05-2019

    20-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்