SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தரமற்ற மினிபஸ்களால் விபத்து ஏற்படும் அபாயம்

4/25/2019 2:46:33 AM

தேனி, ஏப்.25: தேனி மாவட்டத்தில் பழுதான நிலையில் மினி பஸ்கள் இயங்குவதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாத விரிவாக்க குடியிருப்பு பகுதிகள், குக்கிராம மக்களுக்கும் பேருந்து சேவை இருக்க வேண்டும் என்பதற்காக மினி பஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டது. பொதுமக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இத்திட்டமானது கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியாளர்களின் நிர்வாக சீர்கேட்டால் சீரழிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் அதிகமான மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் வசதியில்லாத வழித்தடத்தில் மினிபஸ் இயக்க பெர்மிட் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது, ஏற்கனவே பஸ்கள் இயங்கக்கூடிய வழித்தடங்களில் மட்டும் மினி பஸ்களை இயக்கிவிட்டு, பெர்மிட் பெற்ற வழித்தடங்களில் மினிபஸ் இயக்காதநிலையே உள்ளது.
 பேருந்துகள் இயங்கும் வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கப்படுவதால், அரசு பஸ்களுக்கு வருமான இழப்பு அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டத்தில் ஓடக்கூடிய பல மினி பஸ்கள் தகுதி இல்லாததாகவே உள்ளது. படிக்கட்டுகள் உடைந்தும், டயர்களின் பட்டன் இல்லாமல் தேய்ந்தும் ஆங்காங்கே டயர் பஞ்சராகி நின்று விடும் நிலையில் உள்ளது. மேலும் பல மினி பஸ்களில் முன்பக்க டயர்களில் பட்டன் இல்லாமல் தேய்ந்துள்ளதால் அடிக்கடி பஞ்சராகி மினி பஸ் ஒரு புறம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இழுத்துச் செல்லும் நிலை உள்ளது. டயர்கள் தேய்ந்து மோசமான நிலையில் இயக்கப்படும் மினிபஸ்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-05-2019

    19-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-05-2019

    18-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • TaiwanSameSexMarriage

    ஆசியாவில் முதல் முறையாக ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கிய தாய்வான்: எல்.ஜி.பி.டி.யினர் உற்சாகம்!

  • frenchpainterclaude

    பிரான்ஸ் ஓவியர் கிளாட் மொனெட்டின் வரைந்த வைக்கோல் ஓவியம் ரூ.778 கோடி ஏலம் : புகைப்படங்கள்

  • 17-05-2019

    17-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்