SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆட்டோ கட்டணம் அதிகம் கேட்டு பெண்ணை தாக்கிய வாலிபர்கள் கைது

4/25/2019 2:46:23 AM

தேவதானப்பட்டி, ஏப்.25: தேவதானப்பட்டியில் ஆட்டோ கட்டணம் அதிகமாக கேட்டு பெண்ணை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மஞ்சளாறு அணை கிராமத்தைச் சேர்ந்த ராஜா மனைவி சிவலட்சுமி(35). இவர் தேவதானப்பட்டியில் இருந்து மஞ்சளாறு அணை கிராமத்திற்கு செல்வதற்காக அரிசிக்கடை பஸ் ஸ்டாப்பில் நின்றுகொண்டிருந்தார். அப்போது தேவதானப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆதித்யன்(23) என்பவர் மஞ்சளாறுக்கு ஆட்டோ ஓட்டிச் சென்றார். அந்த ஆட்டோவில் சிவலட்சுமி மஞ்சளாறுக்கு சென்றார். மஞ்சளாறு அணை கிராமத்திற்கு முன்பாக செல்லும்போது ஆட்டோவிற்கு அதிக பணம் கேட்டு சிவலட்சுமியை ஆதித்யன் மற்றும் அவரது நண்பர் மலைச்சாமி(21) மிரட்டியுள்ளனர். சிவலட்சுமி தரமறுக்கவே கீழே தள்ளி தாக்கி அசிங்கமாக பேசியுள்ளனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் சிவலட்சுமி புகார் அளித்தார். போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டத்தில் மலைச்சாமி, ஆதித்யன் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்