SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல் தடை புகையிலை விற்பனை அமோகம்

4/25/2019 2:46:14 AM

தேனி, ஏப்.25: தேனி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் தங்குதடையின்றி தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான்பராக், புகையிலை, பான்மசாலா போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிறிய பெட்டிக்கடைகள், டீக்கடையுடன் கூடிய பெட்டிக்கடைகள், பலசரக்குக் கடைகளில் பான்மசாலா பொருள்கள் விற்பனை பகிரங்கமாக நடந்து வருகிறது. தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைசெய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகள், அவ்வப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொள்ள வழக்குப் பதிவு செய்து கணக்குகாட்டி வருகின்றனர். புற்றுநோய் உருவாக்கும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பவர்கள் மீது உண்மையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CivilAviationJetAirways

    மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் போராட்டம்: புகைப்படங்கள்

  • RajivAnniversary28

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28ம் ஆண்டு நினைவு தினம்...மலர் தூவி அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்!

  • ICRA2019

    கனடாவில் ரோபோக்கள் மற்றும் தானியங்கிகளுக்கான சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி: புகைப்படங்கள்

  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்