SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐஸ் கிரீம் வாங்க சென்ற சிறுமி வேன் மோதி சாவு

4/25/2019 2:46:05 AM

சின்னமனூர், ஏப்.25: சின்னமனூரில் ஐஸ் வாங்க சென்ற சிறுமி வேன் மோதி உயிரிழந்தார். சின்னமனூர் சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவரது மகள் ஜெயஸ்ரீ (4). இவர் ஐஸ் வாங்க ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக சிறுமி மீது மோதியது. இதில் சிறுமி படுகாயமடைந்தார். உடனடியாக தேனி மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிந்து சின்னமனூர் அருகே காமாட்சிபுரம், அழகாபுரியை சேர்ந்த பாண்டி மகன் பெத்தனசாமி (25) என்பவரை கைது செய்தனர். வேனையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்