SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பக்கரை அருவிக்கு செல்ல ஜீப் வசதி, சைக்கிள் சேவை வேண்டும்

4/25/2019 2:45:48 AM

பெரியகுளம், ஏப்.25:  பெரியகுளம் அருகே கும்பக்கரை நுழைவுப்பகுதியில் இருந்து அருவிக்கு செல்வதற்கு ஜீப் வசதி மற்றும் சைக்கிள் சேவை அறிமுகப்படுத்த வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் எதிர்பார்க்கின்றனர். பெரியகுளத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் கொடைக்கானல் வனக்கோட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் கும்பக்கரை அருவி உள்ளது. ஆண்டில் பல மாதம் அருவியில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கும்பக்கரை அருவிக்கு சின்ன குற்றாலம் என்ற செல்லப்பெயரும் உண்டு. தற்போது அருவியில் தண்ணீர் அதிகளவில் உள்ளதால் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் திறக்கப்பட உள்ளது. கொடைக்கானலில் இருந்து தேனி மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வந்து செல்கின்றனர்.

கும்பக்கரை அருவி மற்றும் மேற்புறம் நீரோடையில் குளிப்பதில் சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கும்பக்கரை அருவிக்கு பெரியகுளத்திலிருந்து பஸ் வசதி உள்ளது. பஸ் மற்றும் சுற்றுலாப்பயணிகள் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நுழைவுப்பகுதியிலேயே நிறுத்தப்படுகிறது. இதனால் 600 மீட்டர் தூரமுள்ள அருவிப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் நடந்த செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. முதியோர் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். எனவே வனத்துறை  நிர்வாகம் சுற்றுலாப்பயணிகள் அருவிப்பகுதிக்கு செல்வதற்கு ஜீப் வசதியும் சைக்கிள் சேவையும் அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்