SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாம்பரம் அருகே நள்ளிரவில் பரபரப்பு குடியிருப்புக்குள் புகுந்த முதலை

4/24/2019 12:04:11 AM

தாம்பரம், ஏப். 24: தாம்பரம் அருகே குடியிருப்பு பகுதிக்குள் முதலை புகுந்ததால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் பேராசிரியர் சாலை அருகே ஏரி உள்ளது. இந்த ஏரி அருகே வீடுகள் மற்றும் கடைகள் அதிகளவில் உள்ளன. இந்த ஏரியில் 7க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஏரியில் இருந்து 6 அடி நீளமுள்ள ஒரு முதலை ஒன்று, ஏரியில் இருந்து வெளியே வந்துள்ளது. பின்னர், அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பின்னர், வண்டலூர் உயிரியல் பூங்கா அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால், அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கம்பி மற்றும் கயிறுகளால் பல மணி நேரம் போராடி முதலையை பிடித்தனர்.
இதையடுத்து, முதலையை பிடித்து விட்டதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் வேளச்சேரியில் இருந்து வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த முதலையை கைப்பற்றி கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-09-2019

    18-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • guiness_sathana

    எவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..!

  • mexico_isai111

    இராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்!.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்

  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்