SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்காக நிரந்தர குடியிருப்பு வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

4/23/2019 5:30:21 AM

திருப்பூர், ஏப்.23: திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் அடுக்கு மாடி குடியிருப்புகளை தமிழக வீட்டு வசதித்துறை கட்டிக் கொடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி கூறியிருப்பதாவது:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் தென் மாவட்டங்களை சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்தனர். திருப்பூர் மாநகரில் கடந்த சில ஆண்டுகளாக வீட்டு வாடகை அதிகரிப்பு மற்றும் மாநகராட்சி 100 சதவீதம் வரி உயர்வு காரணமாக வீட்டு வாடகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், 50 சதவீதம் தொழிலாளர்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொழிலாளர்கள் மட்டுமே விடுதிகளில் தங்கி வேலை பார்க்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் அடிக்கடி விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த மாவட்–்டங்களுக்கு செல்வதால் உற்பத்தி குறைவு ஏற்படுகிறது. வெளியூர் தொழிலாளர்களை தக்க வைக்க குறைந்த வாடகையில் அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தால் மட்டுமே திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு தேவையான ெதாழிலாளர்கள் கிடைப்பார்கள். திருப்பூர் பகுதிக்கு  வரும் மத்திய, மாநில அமைச்சர்கள் விரைவில் தொழிலாளர்களின் நலன் கருதி அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்படும் என அறிக்கை விடுவதை வழக்கமாக ெகாண்டுள்ளனர்.  நீண்ட காலமாக இருக்கும் ஆட்கள் பற்றாக்குறை பிரச்னையை தீர்க்க பின்னலாடை உரிமையாளர்கள், அனைத்து தொழிற் சங்கங்கள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை  ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதுமட்டுமின்றி பனியன் தொழிலாளர்கள் குறைந்த வாடகையில் வசிக்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்