SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநகராட்சி முழுவதும் குப்பை குவியல் விஷக்காய்ச்சல் பரவும் அபாயம்

4/23/2019 5:30:07 AM

திருப்பூர், ஏப்.23: திருப்பூர் மாநகராட்சிப்பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் பல நாட்களாக குவிந்துள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் காய்கறி கழிவுகளிலிருந்து வெளியேறும் நாற்றத்தால் பல்வேறு இடங்களில் கடுமையான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு விஷகாய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.திருப்பூர் மாநகரில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதால் துப்புரவு தொழிலாளர்கள் பற்றாக்குறையால் முழுமையாக குப்பைகள்,  சாக்கடை கழிவுகள் அகற்றப்படாமல்  துப்புரவு பணிகள் ஸ்தம்பித்துள்ளன. 60 வார்டுகளில் உள்ள பல்வேறு வீதிகளில் குப்பைகளை மூன்று நாட்கள் முதல் 7 நாட்களுக்கு ஒரு முறை அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக பெய்த மழையால் காய்கறி கழிவுகள், பழக்கழிவுகள், ஓட்டல் கழிவுகள் ஆகியவை நனைந்து சகிக்க முடியாத துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் விஷ காய்ச்சல், வயிற்றுபோக்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து அப்பகுதி பொது மக்கள் மாநகராட்சியின் மண்டல  அலுவலங்களில் உள்ள புகார் பதிவேட்டிலும், துணை ஆணையர், சுகாதார ஆய்வாளர் ஆகியோரிடம் முறையிட்டும் இது வரை குப்பை கழிவுகள் அகற்றப்படமால் உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் சுகாதாரப்பணிகள், சீரான குடிநீர் விநியோகம், பஸ் நிலையம் துாய்மை உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் பொது மக்களுக்கு கிடைக்கிறதா, இல்லையா என்பதை மாநகராட்சி கமிஷனர் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். கமிஷனர் சிவக்குமார் அலுவலகத்தை விட்டு வெளியே வராமல் அலுவலகத்தினுள்ளே முடங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • milkashake1111

    பிரிட்டனில் மில்ஷேக்கிங் போராட்டம் : வேட்பாளர்கள் மீது மில்ஷேக்குகளை வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்