SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலை விரிவாக்கப்பணியில் நடைபாதை அமைக்க கோரிக்கை

4/23/2019 5:30:00 AM

திருப்பூர்,ஏப்.23: திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசிபாளையம் முதல் திண்டுக்கல் மாவட்டம் மெட்டூர் வரை ரூ.860 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைத்து வரும் நிலையில் பழனி முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்ல தனி நடைபாதை அமைக்கவேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பழனி முருகன் கோயிலில்  தை பூசம், பங்குனி உத்திரம் வெகு விமரிசையாக  கொண்டாடப்படுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பாதயாத்திரையாக வந்து  முருகனை தரிசிக்கின்றனர். சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முருக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக காவடி எடுத்து கொண்டு ரோட்டில் நடந்து  செல்கின்றனர். பக்தர்கள் அனைவரும் இரவு நேரங்களில் நடந்து செல்கின்றனர். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து தென் மாவட்டங்களுக்கும் 1,200க்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும் செல்கிறது. இந்நிலையில் பழனி பாதயாத்திரை  பக்தர்கள் நீணட துாரத்திலிருந்து வருவதால் வேகமாக நடக்க முடியாமலும், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துகளில் சிக்குகின்றனர்.  அவிநாசிபாளையம் முதல் தாராபுரம் வரை மாநில நெடுஞ்சாலை 30 கி.மீ துாரத்திற்குள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பழனி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 80க்கும் மேற்பட்டோர் சாலை விபத்தில் இறந்துள்ளனர்.வாகனவிபத்துகள் அதிகரித்துள்ளதையும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகமானதால் அவிநாசிபாளையம் முதல் திண்டுக்கல் மாவட்டம் மெட்டூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.860 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தார் ரோடு அமைக்கும் பணிகள் மின்னல் வேகத்தில் துரிதமாக நடந்து வருகிறது.  இத்திட்டத்தில் பழனி முருக பக்தர்களின் நலன் கருதி அவிநாசிபாளையம் முதல் தாராபுரம் வரை 30 கி.மீ தொலைவு வரை தனி நடைபாதை அமைக்கவேண்டுமென மாவட்ட கலெக்டருக்கு சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்