SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாய்க்காலில் மூழ்கி 2 பேர் பலி

4/23/2019 5:29:51 AM

ஈரோடு, ஏப். 23:  ஈரோட்டில் வாய்க்காலில் மூழ்கி 2 பேர் பலியாகி உள்ளனர்.
  ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் ஜவுளிக்கல் வீதியை சேர்ந்தவர் மன்னதான் என்ற மனோகரன் (47). இவர் ஈரோடு கைகாட்டி வலசில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். கடந்த 20ம் தேதி வீரப்பம்பாளையம் பிரிவு அருகே கீழ் பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது வாய்க்காலில் ஆழமான பகுதிக்கு சென்றதால் மனோகரன் நீரில் மூழ்கினார். பின்னர் நேற்று முன்தினம் காலை மனோகரன் உடல் பாலக்காட்டூர் பகுதியில் மிதந்து கொண்டிருந்தது.  இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று மனோகரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 இதேபோல், ஈரோடு மாவட்டம் பர்கூர் ஊகியம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து (55). கூலி தொழிலாளி. இவர் ஈரோடு அடுத்த ஆலுச்சாம்பாளையம் பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலைக்காக சென்றார். பின்னர் மாலையில் அங்குள்ள அக்ரஹார கிளை வாய்க்காலில் குளிக்க சென்றார். அதன்பின்னர் மாரிமுத்து வேலைக்கு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வாய்க்காலில் ஒருவா் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்து சக வேலையாட்கள் சென்று பார்த்தபோது, அது மாரிமுத்து என்பது தெரியவந்தது.   இதனைத்தொடர்ந்து சித்தோடு போலீசார் மாரிமுத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்