SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை கால சிலம்ப பயிற்சி

4/23/2019 4:53:26 AM

கிருஷ்ணகிரி,  ஏப்.23:  கிருஷ்ணகிரியில் கோடைகால சிலம்ப பயிற்சி நடக்க உள்ளதாக  சிலம்பாட்டக்கழக  மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தெரிவித்துள்ளார். இது  குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட  சிலம்பாட்டக் கழகம் மற்றும் சிலம்பாலயா சிலம்ப கலைக்கூடம் சார்பில்,  கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு,  பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிலம்பம் பயிற்சி முகாம் மே  10ம் தேதி துவங்கி 25ம் தேதி வரை 15 நாட்கள் நடக்கிறது. பயிற்சிக்கு ₹150 கட்டணம் செலுத்த வேண்டும். தினமும் காலை, மாலை பயிற்சி நடைபெறும். 5 முதல் 20 வயது வரை  உள்ளவர்களுக்கு சிலம்ப பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிவில் மாவட்ட  சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், மாவட்ட, மாநில மற்றும்  தேசிய போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மற்ற  முக்கிய விளையாட்டுகளுக்கு கிடைக்கும் அனைத்து சிறப்பு சலுகைகளும், சிலம்ப  விளையாட்டிற்கும் பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்