SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாமக்கல்லில் சூறைக்காற்றுடன் கனமழை மரங்கள் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

4/23/2019 4:51:57 AM

நாமக்கல், ஏப்.23:  நாமக்கல்லில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால், திருச்சி சாலையில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் குளிர்ச்சி நிலவி வருகிறது.

தொடர்ந்து, நேற்றும் நாமக்கல் நகரில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், திருச்சி சாலையில் வளையப்பட்டி பகுதியில் 2 புளிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதனால், நாமக்கல்-திருச்சி சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த நாமக்கல் தீயணைப்பு துறையினர் சாலையில் கிடந்த புளிய மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்