SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலையம்பட்டி சண்முகவேல் நகரில் போக்குவரத்துக்கு இடையூறாகும் மின்கம்பங்கள்

4/23/2019 2:55:17 AM

அருப்புக்கோட்டை, ஏப். 23: பாலையம்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள விரிவாக்கப்பகுதியான சண்முகவேல் நகரில், போக்குவரத்து இடையூறாக இருக்கும் மின்கம்பங்களை தெருவோரம் மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும், விரிவாக்கப்பகுதிகளான ராஜீவ் நகர், சண்முகவேல் நகரில் போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பாலையம்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள ராஜீவ் நகரில் 4 தெருக்களும், சண்முகவேல் நகரில் 5 தெருக்களும் உள்ளன. இங்கு போதிய அடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வாறுகால், சாலை, தெருவிளக்கு வசதிகள் முறையாக இல்லை. இப்பகுதியில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால், குப்பைகளை ஆங்காங்கே கொட்டுவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ராஜீவ்நகர் மெயின் வீதியில் வாறுகால் முறையாக அமைக்காததால், கழிவுநீர் தேங்குகிறது. வாறுகால்களை தூர்வாருவதற்கு பணியாளர்கள் வருவதில்லை. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. சாலை வசதியும் இல்லை. ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இதனால், பொதுமக்கள் தனியார் வாகனங்கள் மூலம் வரும் குடிநீரை குடம் ரூ.10க்கு விலைக்கு வாங்கும் அவலம் உள்ளது. மினிபவர் பம்ப், அடிபம்பு வசதியில்லை. மினிபவர் பம்ப் அமைக்க, போர்வெல் அமைத்து, குடிநீர் தொட்டி வைப்பதற்காக கட்டிடம் கட்டப்பட்டு, அவை காட்சிப்பொருளாக உள்ளது.

அடிப்படை வசதியில்லாத சண்முகவேல் நகர்:  சண்முகவேல் நகரில் 30 அடி தெரு உள்ளது. இந்த தெருவின் மையப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் ஊன்றப்பட்டுள்ளன. இதனால், போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இப்பகுதி வழியாகத்தான் மற்ற விரிவாக்க பகுதிகளுக்கு பொதுமக்கள் வாகனங்களில் செல்கின்றனர். நடுரோட்டில் மின்கம்பங்கள் இருப்பதால் கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. இந்த மின்கம்பங்களை தெரு ஓரத்தில் மாற்றியமைக்க பொதுமக்கள் பலமுறை மின்வாரியத்துக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இங்குள்ள 5வது தெருவில் சாலை வசதியில்லை. மண்சாலையாக உள்ளது. இந்த சாலை மழை காலங்களில் சேறும் சகதியுமாக உள்ளது. வாறுகால் வசதி இல்லாததால் தனியார் பிளாட்டுகளில் கழிவுநீர் தேங்குகிறது. இதில், கூட்டம், கூட்டமாக பன்றிகளால் புரளுகின்றன. இப்பகுதியில் முறையான வாறுகால், சாலை வசதியில்லை. விரிவாக்கப் பகுதிகளான ராஜீவ் நகர், சண்முகவேல் நகருக்கு தேவையான சாலை, வாறுகால் வசதிகளை செய்து தருவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. விரிவாக்கப்பகுதி புறக்கணிக்கப்பட்ட பகுதியாக உள்ளது என பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். எனவே, ராஜீவ் நகர், சண்முகவேல் நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்