SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தெருவோரம் மாற்றியமைக்க வலியுறுத்தல் விருதுநகரில் 3 ஆண்டாக திறக்கப்படாத நவீன சுகாதார வளாகங்கள்

4/23/2019 2:55:09 AM

விருதுநகர், ஏப். 23: விருதுநகரில் 3 ஆண்டுகளுக்கு முன் கட்டுமானப் பணி முடிந்த சுகாதார வளாகங்கள், இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. இதனால், திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.விருதுநகரில் உள்ள டிடிகே ரோடு, முத்துராமலிங்க நகர், ஆனைக்குழாய் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ஒவ்வையார் தெரு ஆகிய பகுதிகளில், நகராட்சி நூற்றாண்டு விழா நிதி ரூ.15 லட்சத்தில் கடந்த 2016ல் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டன. கட்டுமானப் பணி முடிந்து 3 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்படவில்லை. சுகாதார வளாகங்களை திறக்க கோரி பொதுமக்கள் பலமுறை முறையிட்டும், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை.

மேலும், நவீன சுகாதார வளாகத்திற்கு எதிரே, சிவன்கோவில் தெரு பகுதி மக்களுக்காக சிவன்கோவில் தெருவில் எம்பி நிதியில் ரூ.6.50 லட்சம் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகமும் திறக்கப்படவில்லை. இரண்டு சுகாதார வளாகங்களும் பயன்பாட்டிற்கு வராததால் கௌசிகா ஆறு மற்றும் எதிர்பகுதியில் உள்ள முட்புதர்களை பொதுமக்கள் கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், சுகாதாரக்கோடு ஏற்படுகிறது. குப்பையற்ற நகராக மாற்ற முயற்சிக்கும் நகராட்சி ஆணையர், 3 ஆண்டுகளுக்கு மேலாக மூடிக்கிடக்கும் நவீன சுகாதார வளாகங்களை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து நகராட்சி ஆணையர் பார்த்தசாரதியிடம் கேட்டபோது, ‘சுகாதார வளாகங்களில் உடைந்த குழாய்களை சீரமைத்து, விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்