SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொது குழாயில் குடிநீர் திருட்டை தடுக்க வேண்டும்

4/23/2019 2:51:07 AM

தேனி, ஏப்.23:  ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி கிராமத்தில் பொதுக்குழாய் இணைப்பில் இருந்து தனியார் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதை தடுக்க வேண்டுமென கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
 ஆண்டிபட்டி அருகே முத்தனம்பட்டி கிராமத்தை சேர்ந்த சுமார் 50 பேர் தேனி கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர். இம்மனுவில், முத்தனம்பட்டியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான குடிநீர் குழாயில் இருந்து இணைப்பை தனது தோட்டத்திற்கு இதே கிராமத்தை சேர்ந்த வண்டிக்காரபாலு என்பவர் திருப்பி விட்டுள்ளார். ஆள்பலம், அதிகார பலத்துடன் செயல்படுகிறார். இதனால் கடந்த 6 மாதகாலமாக கிராமத்திற்கு குடிநீர் வரதாத நிலை உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இதனை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு உரிய குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்