SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலெக்டரிடம் கிராமமக்கள் மனு வேதா கல்வி அறக்கட்டளை நலத்திட்ட உதவி வழங்கும் விழா

4/23/2019 2:51:00 AM

கம்பம், ஏப்.23:  கம்பத்தில் வேதா கல்வி மற்றும் சேவை அறக்கட்டளை சார்பில் கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா  நடைபெற்றது. வேதா கல்விஅறக்கட்டளை நிறுவனர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். உத்தமபாளையம் கல்வி மாவட்ட அலுவலர் திருப்பதி முன்னிலை வகித்தார். மேலாளர் பிந்துஸ்ரீ வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கம்பம் எம்எல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பேசினார். அகில இந்திய கல்வி ஆலோசகர் சங்க தேசிய தலைவர் மனோஜ் மனையத்தொடி, பொருளாளர் ஷெரீப் பாபு, கோபிசெட்டிபாளையம் ஜே.கே.எம்.எம் இன்ஜினியரிங் கல்லூரி இயக்குநர் டாக்டர் ஸ்ரீதரன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் கல்வி குழும தலைமை நிர்வாக அதிகாரி கவுதம், ஐபிசிஏஐ பயிற்சி குழு தலைவர் அபிலாஷ் ஜோசப் கலந்துகொண்டனர்.   இதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, மாவட்ட அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு “வேதா கல்வி விருது 2019” வழங்கப்பட்டது. விளையாட்டுத்துறையில் மாநில, மாவட்ட அளவில் சாதித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 800 மாணவ, மாணவிகளுக்கு காலேஜ் பேக் கிட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் டெல்லிஹால் சாகுல், சின்னக்கவுண்டர் ராஜசேகர் மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-10-2019

    20-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-10-2019

    19-10-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • boniaredlady

    தனது வாழ்க்கையை சிகப்பு வண்ணத்தில் நிரப்பிய மூதாட்டி: வீடு, ஆடை என அனைத்திலும் சிகப்பு வண்ணம்!

  • chisa

    தகவல் தொடர்பு தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணில் வெற்றிகரமாக ஏவியது சீனா

  • karvachauth_2019

    கணவரின் நலனுக்காக மனைவி அனுசரிக்கும் கர்வா சவுத் விரதம் : நோன்பு இருந்து கணவனை சல்லடை வழியாக பார்க்கும் பெண்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்