SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

லைப் இன்னோவேசன் பள்ளியில் பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றம்

4/23/2019 2:50:53 AM

தேனி, ஏப்.23:  தேனி நகரில் உள்ள லைப் இன்னோவேசன் பள்ளியில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்ச்சி நடந்தது.  தேனி நகர் நகராட்சி அலுவலகம் எதிரே லைப் இன்னோவேசன் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி நடந்தது. குழந்தைகளின் கலைத்திறனை ஊக்குவிப்பதற்கும், திறமையை வெளிக்கொணர்வதற்கும் வசதியாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 12 குழந்தைகளுக்கு சலங்கை பூஜை நடந்தது. இதனையடுத்து 80 குழந்தைகள் கலந்து கொண்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் கலந்து கொண்டவர்களை பள்ளியின் தாளாளர் நாராயணபிரபு வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக வடபுதுப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரேணுப்ரியாபாலமுருகன், தொழிலதிபர்கள் மலால்காம்ப்ளக்ஸ் வெங்கடேசன், எஸ்.என்.கண்ணன்,  சீனிவாசன், தங்கமாளிகை சத்யநாராயண், லால்பகதூர் சாஸ்திரி, அகமதுகான், கல்வியாளர்கள் ராஜ்மோகன், தாமோதரன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் துர்கேஷ், கார்த்திகேயன், முரளி, லட்சுமி நாட்டியாலயா ஆசிரியர் கலைமாமணி ராஜலட்சுமி ஆகியோர் செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்