SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

10ம் வகுப்பு துணை தேர்விற்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்

4/23/2019 2:50:37 AM

தேனி, ஏப். 23: அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: 2019, ஜூனில் நடக்க உள்ள பத்தாம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், இன்றும், நாளையும் (ஏப்.23, ஏப்.24) தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களில் நேரில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். www.dge.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் அனைத்து முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களில் சேவை மைய விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை அறியலாம்.தேர்வுக்கட்டணம் ரூ.125, ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ.50, சிறப்பு அனுமதிக்கட்டணம் ரூ.500 செலுத்த வேண்டும். விண்ணப்பித்தபின் வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதால் இச்சீட்டை பத்திரமாக வைத்திருத்தல் வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்