SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவர் எண்ணிக்கையை காட்டி ஆங்கில வகுப்பை நீக்க கூடாது புலிக்குத்தி கிராமத்தினர் மனு

4/23/2019 2:50:30 AM

தேனி, ஏப்.23: மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளதை காரணம் காட்டி ஆங்கில மீடிய வகுப்பை நீக்க கூடாது என வலியுறுத்தி புலிக்குத்தி கிராமத்தினர் தேனி கலெக்டரிடம் மனு அளித்தனர்.  தேனி மாவட்டம் புலிகுத்தி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்த கலெக்டர் பல்லவிபல்தேவிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  மனுவில், புலிக்குத்தி கிராமத்தில்  அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்போது 125 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.  சில வருடங்களுக்கு முன்பு வரை 424 மாணவர்கள் பயின்றனர். மாணவர்கள் குறைவை தடுக்க கடந்த 2015ம் ஆண்டில் இப்பள்ளியில் ஆங்கில மீடியம் துவக்கப்பட்டது. ஆங்கில மீடியம் துவக்கப்பட்ட பிறகு மாணவர் சேர்க்கை அதிகரித்தது.  இந்நிலையில் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆங்கில மீடிய வகுப்பில் 15 மாணவர்களுக்கு கீழ் சேர்க்கை இருந்தால், இம்மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வற்புறுத்துகிறார். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க பள்ளித் தலைமை ஆசிரியர் முயற்சிக்க வேண்டும். இதனைவிடுத்து, மாணவர்கள் எண்ணிக்கையை காரணம் காட்டி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றுவது கூடாது. தொடர்ந்து ஆங்கில மீடிய வகுப்புகள் நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yamunariver20

    கரைபுரண்டிடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்