SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழை விவசாயத்தை கைவிடும் தேவாரம் பகுதி விவசாயிகள்

4/23/2019 2:50:21 AM

தேவாரம், ஏப்.23 : தேவாரம் பகுதிகளில் மழை பெய்யாதநிலையில் வாழை விவசாயத்தை விவசாயிகள் கைவிட்டுவிட்டனர்.கோம்பை, பல்லவராயன்பட்டி, மேலசிந்தலைசேரி, கருக்கோடை, தேவாரம், லட்சுமிநாயக்கன்பட்டி, தம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அதிக ஏக்கர் பரப்பில் வாழை விவசாயம் நடைபெறுவது வழக்கம். இதற்காகவே 100அடி முதல் 200 அடிவரை தோட்டத்து கிணறுகள் உள்ளன. வடகிழக்கு, தென்மேற்கு, கோடை மழை பெய்யும்போது தோட்ட கிணறுகளில் அதிகமான தண்ணீர் ஊற்றெடுக்கும். 18ம்கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்போது இங்குள்ள கண்மாய், குளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து நிற்கும். இதனால் நிலத்தடிநீர்மட்டம் உயரும்போது வாழை விவசாயம் செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடமோ மழையே இல்லை. இதனால் தோட்ட கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் வாழை விவசாயம் அடியோடு சரிந்துவிட்டது. கடந்த காலங்களில் சுமார் 100 ஏக்கர் வரையிலும் செய்யப்பட்ட விவசாயம் இப்போது 20 ஏக்கருக்கும் குறைவாகவே செய்யப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. விவசாயிகள் வங்களில் வாங்கிய கடனை அடைக்க முடியாதநிலையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • 16-07-2019

    16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

  • fra

    பிரான்சில் கோலாகலமாக நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டம்: 200 ராணுவ வாகனங்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்