SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘சூட்டால்’ சூடு பிடிக்கும் நுங்கு வியாபாரம்

4/23/2019 2:37:33 AM

செம்பட்டி, ஏப். 23: கோடை வெயில் கொளுத்தி வருவதால் நுங்கு வியாபாரம் சூடு பிடித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பழங்கள், ஜூஸ், இளநீர், கரும்புச்சாறு போன்றவற்றை அதிகளவில் பருகி வருகின்றனர். இந்த பட்டியலில் நுங்குவும் இடம்பிடித்துள்ளது. கோடை வெயில் மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி தரும் என்பதாலும் நுங்கு விற்பனை சூடு பிடித்துள்ளது. சின்னாளபட்டிக்கு மதுரை மாவட்டம் சோழவந்தான், திருமங்கலம், மட்டப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நுங்குகள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வாங்கும் வியாபாரிகள் ரூ.20க்கு 3 நுங்குகள் வீதம் விற்று வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நுங்கு விற்பனை நடக்கிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்