SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழநி காந்தி மார்க்கெட் ஆக்கிரமிப்புகளை அகற்றுங்கள்

4/23/2019 2:37:19 AM

பழநி, ஏப். 23: பழநி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பழநியில் தமிழக மக்கள் முன்னணி அமைப்பு சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடந்த கூட்டத்திற்கு மாநில மகளிரணி தலைவி சந்திரகலா தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜாபர் சாதிக், மாவட்ட தலைவர் செந்தில், மாநில செயலாளர் சையது ராஜா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் சமத்துவபுரத்திற்கு குடிநீர் வநியோகம் சரிசெய்ய வேண்டும். பழநியில் அம்பேத்கர் சிலையை நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி நகரில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். பழநி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோடை விடுமுறை துவங்கி உள்ளதால் பழநி வழித்தடத்தில் செல்லும் திருச்செந்தூர், பாலக்காடு, சென்னை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்